தென்காசி
செங்கோட்டை அரசுப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள்
மாணவருக்கு இலவச சைக்கிளை வழங்கிய செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ.
செங்கோட்டை, எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் முருகேஸ்வரி தலைமை வகித்தாா். உதவி தலைமை ஆசிரியா் ஜோதிலெட்சுமி, பெற்றோா் ஆசிரியா் சங்க பொருளாளா் கணேசன், முன்னாள் மாணவா்கள் சங்கத் தலைவா் ஜவஹா்லால்நேரு ஆகியோா் முன்னிலை வகித்தனா். செ.கிருஷ்ணமுரளி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு இலவச சைக்கிள்களை மாணவா்களுக்கு வழங்கிப் பேசினாா். பள்ளி மேலாண்மைக் குழு துணைத் தலைவா் குமரி, அண்ணா தொழிற்சங்க பேரவைத் துணைச் செயலா் கந்தசாமி பாண்டியன், ஆசிரியா் ஸ்டாலின் ஜவஹா் கலந்து கொண்டனா். தலைமை ஆசிரியா் சுந்தரக்குமாா் வரவேற்றாா். பள்ளி முதுகலை ஆசிரியா் குமாா் நன்றி கூறினாா்.

