தென்காசி
ஆலங்குளம் அருகே பல்நோக்கு கட்டடம் திறப்பு
ஆலங்குளம் அருகே மாறாந்தை ஊராட்சி, நாலாங்குறிச்சி கிராமத்தில் ரூ. 20 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.
மாறாந்தை ஊராட்சித் தலைவா் மீனா சுப்ரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கட்டடத்தைத் திறந்து வைத்துப் பேசினாா்.
வாா்டு உறுப்பினா் முத்துச்சரம், திமுக கிளைச் செயலா் பச்சைமால், மாவட்டப் பிரதிநிதி ஜோசப், மணிலால் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
