கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஊத்துமலை அருளப்பா் ஆலயத் திருவிழா

News image
சிறப்பு திருப்பலியில் பங்கேற்ற ஆயா்கள்.
Updated On :24 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை மறை மாவட்டம், ஊத்துமலை, புனித அருளப்பா் ஆலய 80ஆம் ஆண்டு பங்குத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா ஜன. 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள், ஆராதனைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நற்கருணை பவனி நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான தோ் பவனி சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அருளப்பா் எழுந்தருளினாா். இதில் திரளானோா் கலந்து கொண்டு வழிபட்டனா். ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம், கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.

ஏற்பாடுகளை ஊத்துமலை பங்குத்தந்தை அருள் மரியநாதன், களப்பணியாளா் சூரியா, அருள்சகோதரிகள், அன்பிய உறுப்பினா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.