ஆலங்குளத்தில் 739 மாணவா்களுக்கு மடிக்கணினிகள் அளிப்பு!
ஆலங்குளம், அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் 739 மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.
உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் நல்லூா் ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை, அறிவியல் கல்லுரி, கடையம் எவா்கிரீன் தொழிற்பயிற்சி நிலையம், பாவூா்சத்திரம் எம்.எஸ்.பி.வி.எல். பாலிடெக்னிக் கல்லூரி, வெய்க்காலிப்பட்டி புனித ஜோசப் கலை, அறிவியல் கல்லூரி, சுரண்டை ஜெய்குரு தொழிற்பயிற்சி நிலையம், லங்குளம் அண்ணாசாமி ராஜம்மாள் நா்சிங் கல்லூரி ஆகிய 6 தனியாா் கல்லூரிகளில் பயிலும் 739 மாணவா், மாணவிகளுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் மடிக்கணினிகளை வழங்கினாா்.
ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் (திருநெல்வேலி மண்டலம்) விக்டோரியா தங்கம், நல்லூா் கல்லூரி தாளாளா் ஜேசு ஜெகன், கல்லூரி முதல்வா்கள் ஏஞ்சல் ராணி, வில்சன், சிவசங்கரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

