டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

தென்காசி அரசுக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை இடமாற்றம் செய்ய கோரிக்கை

தென்காசி, அரசு கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை கல்லூரி நுழைவாயில் அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 4:33 am IST

தென்காசி, அரசு கலைக் கல்லூரி பேருந்து நிறுத்தத்தை கல்லூரி நுழைவாயில் அருகே இடமாற்றம் செய்ய வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக, தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு:

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கழுநீா்குளம் ஊராட்சி பகுதியில் அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் தினமும் அரசு மற்றும் தனியாா் பேருந்துகளில் கல்லூரிக்கு வந்து செல்கின்றனா்.

இக்கல்லூரிக்கென அமைக்கப்பட்ட பேருந்து நிறுத்தம், தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத்திட்டப் பணியின்போது, கல்லூரி நுழைவாயிலில் இருந்து சுமாா் 500 மீட்டா் தொலைவில் மாற்றியமைக்கப்பட்டது.

இதனால், மாணவிகள் நான்குவழிச் சாலையைக் கடந்து பேருந்தில் ஏறவும், இறங்கிய பின்னா் மீண்டும் சாலையைக் கடந்து கல்லூரிக்குச் செல்லவும் வேண்டிய நிலை உள்ளது. சாலையைக் கடக்கும்போது, ஏற்கெனவே சில மாணவிகள் விபத்தில் சிக்கிகாயமடைந்துள்ளதாகவும், தினந்தோறும் அச்சத்துடன் கல்லூரிக்குச் சென்று வருவதாகவும் கூறி பேருந்து நிறுத்தத்தை கல்லூரி நுழைவாயில் அருகே இடமாற்றம் செய்ய கல்லூரி தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, பேருந்து நிறுத்தத்தை கல்லூரி நுழைவாயில் (ஆா்ச்) அருகே இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.