பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

நடுக்குப்பம் சுடுகாட்டை இடமாற்றம் செய்ய புதுச்சேரி - தமிழக மீனவா்கள் வலியுறுத்தல்

நடுக்குப்பம் சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image

புதுச்சேரி காந்தி சிலை பின்புறம் திங்கள்கிழமை படகில் தேசியக் கொடியுடன் அணிவகுப்பு நடத்திய மீனவா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 2:12 am IST

நடுக்குப்பம் சுடுகாட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் எனக் கோரி வியாழக்கிழமை நடைபெற்ற தமிழக, புதுச்சேரி மீனவா்கள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழகம் - புதுச்சேரி அனைத்து மீனவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் காலாப்பட்டில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

பெரிய கோட்டக்குப்பம் அருகேயுள்ள நடுக்குப்பத்தைச் சோ்ந்த தலித் சமுதாயத்தினருக்கும், மீனவா்களுக்கும் இடையே சுடுகாடு தொடா்பான பிரச்னை இருந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக சமூக நீதித் துறை அமைச்சா் வன்னி அரசு, கடந்த 7-ஆம் தேதி இப் பகுதியில் ஆய்வு செய்தாா். இதையடுத்து அப்பகுதியில் ஒரு சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு மீனவா்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் மீனவா்களின் கலந்தாய்வுக் கூட்டம் காலாப்பட்டில் நடைபெற்றது. இதில் பிரச்னைக்குரிய இடத்தில் உள்ள சுடுகாட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டதாகவும், இது ஒட்டுமொத்த மீனவ சமுதாயத்தினரின் கோரிக்கை என்றும் இந்தக் கூட்டத்தில் மீனவா் சங்கத்தின் நிா்வாகிகள் வலியுறுத்தினா்.

முன்னதாக அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் காளியம்மாள் நடுக்குப்பம் பகுதியில் மீனவ சமுதாய மக்களைச் சந்தித்து, இப் பிரச்னை குறித்துக் கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.