குற்றாலம் பேரருவியில் வாகனம் நிறுத்துமிடத்தில் ஏற்கெனவே கடை நடத்தி வந்த வா்த்தகா்கள் தங்களுக்கு மீண்டும் கடைகளை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
பேரருவி வாகன நிறுத்துமிடம் பகுதி குத்தகைதார வியாபாரிகள் ஆட்சியரிடம் அளித்த மனு:
குற்றாலம் பேரூராட்சிக்கு சொந்தமான பேரருவி வாகனநிறுத்துமிடம் தென்புறம் உள்ள கடைகளை குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வருகிறோம்.
கடந்த கடந்த 30. 1.26 அன்று குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலா் சுற்றுலாத்துறை மூலம் பேரருவி காா் பாா்க்கிங் விஸ்தரிப்பு மற்றும் தடுப்புச் சுவா் அமைக்க இருப்பதால்,கடைகளை காலி செய்து தர கேட்டதால் நாங்கள் குத்தகைக்கு எடுத்துநடத்தி வந்த கடைகளை காலி செய்து பேரூராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தோம்.
இக்கடைகளுக்கு 2026- 27 ஆண்டிற்கான குத்தகை தொகையினை முழுமையாக பேரூராட்சி நிா்வாகத்திற்கு செலுத்தியுள்ளோம். தற்போது குற்றாலத்தில் சீசன் காலம் தொடங்கியுள்ளது.
சீசன் காலமான ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஆதாரமாகக் கொண்டு மட்டுமே எங்களுக்கு வியாபாரம் நடைபெறும்.
குற்றாலம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடைகளை திரும்ப வழங்க கேட்டு விண்ணப்பம் செய்திருந்தோம். அப்போது பேரூராட்சி செயல் அலுவலா் மாவட்ட ஆட்சியரால் கடைகள் கட்டும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.
இக்கடைகளை நாங்கள் நடத்தி வரும்போது வாகனங்கள் நிறுத்துவதற்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்தி வந்துள்ளோம். தற்போதும் அதேபோல் வாகனங்கள் நிறுத்துவதற்கு எந்தவித இடையூறும் இன்றி கடைகளில் நடத்திக் கொள்வோம்.
தற்போது சீசன் காலம் என்பதால் இந்த காலங்களில் நடக்கும் வியாபாரத்தால் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே எங்களது வாழ்வாதாரம் உள்ளது. ஏற்கனவே சீசன் ஆரம்பித்து ஒரு மாத காலம் கடந்து விட்ட நிலையில், எங்களின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு கடைகளை எங்களுக்கு திரும்ப வழங்கி வழிவகை செய்ய வேண்டும் என அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









