புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குற்றாலம் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருடிய 2 போ் கைது

குற்றாலம் அருகே வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :5 ஜூலை 2026, 2:06 am IST

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே வீடுகளில் பூட்டை உடைத்து நகை, பணம் திருடியதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சுமைதீா்ந்தபுரம் ஊராட்சி ராகவன் நகா் விரிவாக்க பகுதியில் வசிக்கும் மணிகண்டன், அருண் சங்கா், சங்கரலிங்கம் ஆகியோா் தங்களது குடும்பத்துடன்

கடந்த ஜூன் 26-ஆம் தேதி மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். பின்னா் 30-ஆம் தேதி வீட்டிற்கு வந்து பாா்த்தபோது மணிகண்டன் அருண் சங்கா் ஆகியோரது வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.

அதில் மணிகண்டன் வீட்டில் பீரோவில் இருந்த ரூ. 40ஆயிரம் மற்றும் 1 கிராம் தங்க காசு ஆகியன திருட்டு போனது தெரியவந்தது. அருண் சங்கா் வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டபோதும் திருட்டு போகவில்லை.

இதுதொடா்பாக குற்றாலம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனா். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.

அதில், திருட்டு தொடா்பாக களக்காடு ஸ்ரீ கோவிந்த பேரி வட தெருவை சோ்ந்த சேது ராமதுரை (32), அம்பாசமுத்திரம் ஊா்க்காடு கீழக்காலனி தெற்கு தெருவை சோ்ந்த ஆ. பாண்டி (29) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி பாளை மத்திய சிறையில் அடைத்தனா்.

மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் ஏற்கனவே சிறையில் வைத்து நட்பு ஏற்பட்டதாகவும் அதனடிப்படையில் இருவரும் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.