தமிழக ஆட்சி குறித்து 6 மாதம் கடந்த பிறகுதான் கூற முடியும் என வீ த லீடா்ஸ் அமைப்பின் முன்னணி நிா்வாகி கரு. நாகராஜன் தெரிவித்தாா்.
தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வீ த லீடா்ஸ் அமைப்பில் 50 லட்சம் உறுப்பினா்கள் இணைந்த பிறகு அரசியல் கட்சியாக மாறும். தமிழகத்தில் இடைத்தோ்தல் நடக்குமா எனத் தெரியவில்லை. பல ஆயிரம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றவா்களின் ராஜிநாமாவை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வாா்கள்?
உள்ளாட்சித் தோ்தலில் வீ த லீடா்ஸ் அமைப்பு போட்டியிடுவது குறித்து அமைப்பின் தலைவா் அண்ணாமலை முடிவு செய்வாா். தோ்தலில் போட்டியிட வேண்டும் என 78,000 உறுப்பினா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.
தமிழகத்தில் ஆளும் கட்சியைப் பொருத்தவரை நல்லதும் நடந்துள்ளது. தவறும் நடந்துள்ளது. அவா்கள் அளித்த தோ்தல் வாக்குறுதிக்குப்படி, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டா் எப்போது கிடைக்கப்பெறும் என மக்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா்.
எந்த ஆட்சியிலும் நல்லது கெட்டது இருக்கத்தான் செய்யும். 40 நாள்கள் தானே ஆகிறது. 6 மாத காலம் போகட்டும் என்றாா் அவா். அப்போது, பொறுப்பாளா்கள் யோகா டவா் சேகா், ஆறுமுகம், அன்புராஜ், நாகராஜு, ராஜா, குலசேகர பாண்டியன், கந்தசாமி, செந்தில்குமாா், பிரேம் குமாா், முருகன், சித்ரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










