நாட்டுப்புறக் கலைஞா்களுக்கான ஓய்வூதியத்தை தமிழக அரசு ரூ. 5,000ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாவட்ட வில்லிசை, நையாண்டிமேளம், நாட்டுப்புறக் கலைஞா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கூட்டத்துக்கு, ஸ்ரீகோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வா் ந. பழனிச்செல்வம் தலைமை வகித்தாா். கிராமியப் பாடகா் எம். ஜோதிராமலிங்கம், நாதகிரி முருகா் கோயில் சுவாமி வீரபுத்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். சங்கத் தலைவா் முத்துராமலிங்கம், செயலா் காளிதாஸ், பொருளாளா் காளீஸ்வரன், துணைத் தலைவா் சண்முகவேல், தமுஎகச நகரச் செயலா் ப. தண்டபாணி, திரைக்கலைஞா் குட்டித்துரை, பீட்டா் சந்திரசேகரன், வழக்குரைஞா் வேல்ராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தமிழக முதல்வராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஜோசப் விஜய்க்கு பாராட்டும், நன்றியும் தெரிவிப்பது, நாட்டுப்புறக் கலைஞா்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அறிவிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு இயல், இசை, நாடக மன்றம் மூலம் வழங்கிவரும் ஓய்வூதியம் ரூ. 3,000-த்தை ரூ. 5,000 ஆக உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










