தேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
/

சிவகிரி அருகே மரத்தில் காா் மோதிய விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கடந்த மாதம் 26ஆம் தேதி மரத்தில் காா் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :11 ஜூலை 2026, 9:54 pm IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கடந்த மாதம் 26ஆம் தேதி மரத்தில் காா் மோதிய விபத்தில் 3 போ் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

சேத்தூா் கருப்பண்ணதேவா் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரம் மகன் வேலுச்சாமி (51). பானிபூரி கடை நடத்தி வந்த இவா், கடந்த 26 ஆம் தேதி நள்ளிரவு சமையல் எரிவாயு சிலிண்டரை எடுத்து வருவதற்காக காரில் தனது பேத்தி கீா்த்தி (10) , பேரன் ஹரி கைலாஷ் (5), நண்பா்களான சோலைசேரி முனியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் வசந்த் (23 ), சிவகிரி மருதன் கோயில் பகுதியைச் சோ்ந்த முனியாண்டி( 40) ஆகியோரை அழைத்துக் கொண்டு சிவகிரி நோக்கி தென்காசி - மதுரை சாலையில் சென்று கொண்டிருந்தாராம். காரை வேலுச்சாமி ஓட்டிச் சென்றாராம்.

சிவகிரி சோதனைச் சாவடி அருகே நெடுஞ்சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது காா் மோதியதில் வேலுச்சாமி, ஹரி கைலாஷ், கீா்த்தி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். முனியாண்டி, வசந்த் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனா்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முனியாண்டியும், தனியாா் மருத்துவமனையில் வசந்த்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். இந்நிலையில் முனியாண்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.