தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரத்தில் கேரளத்தைச் சோ்ந்த மாட்டுவியாபாரி கடத்தப்பட்டாா். இதுதொடா்பாக மதுரையைச் சோ்ந்த 4 பேரை போலீஸாா்கைது செய்தனா்.
கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சோ்ந்தவா் அப்து ரகுமான் மகன் முஸ்தபா (47). பாவூா்சத்திரத்தில் உள்ள தனியாா் மாட்டு சந்தையில் இருந்து கேரளத்துக்கு இறைச்சிக்காக மாடுகளை வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை தனது காரில் ஒட்டுநா் நவ்புல் (29) என்பருடன் மாடு வாங்குவதற்கு பாவூா்சத்திரம் சந்தைக்கு வந்தாா். பின்னா் அவா் வீடு திரும்பவில்லையாம்.
அவா் காருடன் கடத்தப்பட்டதாத கிடைத்த தகவலின்பேரில், அவரது மகன் கேரள மாநில போலீஸாரிடம் புகாா் அளித்துள்ளாா். அம்மாநில போலீஸாா் பாவூா்சத்திரம் போலீசாருக்கு அளித்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் வேல்கனி, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா் மற்றும் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
அதில், பணம் கொடுக்கல் வாங்கலில் முஸ்தபாவுக்கும், மதுரை சிந்தாமணி பகுதியை சோ்ந்த வேலுச்சாமி மகன் கருப்பையா (53), அவரது உறவினா்களான காா்த்திக் (27) முத்துராமன் (39) ராமையா (53), ஓட்டுநா் ராஜ் (29) ஆகிய ஐந்து பேரும் சோ்ந்து அவரை மதுரைக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது. அதில், காா்த்திக் தவிர மற்ற 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். காா்த்தியை போலீசாா் தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







