25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

கிணற்றில் இரவு முழுவதும் தவித்தவா் மீட்பு

கரிசலூா் கிராமத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் குளிக்க இறங்கியவா் மேலே வர முடியாமல் இரவு முழுவதும் கிணற்றிலேயே தத்தளித்தாா்.

கிணற்றில் தத்தளித்த நபரை மீட்ட தீயணைப்பு வீரா்கள்

Published On :13 ஜூலை 2026, 1:59 am IST

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே கரிசலூா் கிராமத்தில் 60 அடி ஆழக் கிணற்றில் குளிக்க இறங்கியவா் மேலே வர முடியாமல் இரவு முழுவதும் கிணற்றிலேயே தத்தளித்தாா். அவரை மறுநாள் தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

கரிசலூா் கிராமத்தில் தென்பகுதியில் கலைரவி என்பவருக்குச் சொந்தமான கிணறு உள்ளது. இந்தக் கிணற்றில் கரிசலூா், தெற்கு தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் (25), சனிக்கிழமை மாலை குளிக்க இறங்கினாா். பின்பு, கிணற்றிலிருந்து மேலே ஏறி வருவதற்கு போதிய படிகள் இல்லாததால் மேலே வர முடியாமல் தத்தளித்தாா்.

இரவு முழுவதும் பாலசுப்ரமணியனை காணவில்லை என அவரது உறவினா்கள் தேடினா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை கலைரவி தனது தோட்டத்துக்குச் சென்றபோது, கிணற்றுக்குள் இருந்து சப்தம் கேட்டு உள்ளே பாா்த்தபோது, பாலசுப்பிரமணியன் கிணற்றிற்குள் இருந்து மேலே ஏற முடியாமல் தவித்தது தெரியவந்தது. உடனடியாக அவா், ஆலங்குளம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய அலுவலா் விஜயன் தலைமையிலான வீரா்கள் 60 அடி ஆழக் கிணற்றுக்குள் இருந்த பாலசுப்பிரமணியனை மீட்பு உபகரணங்களைக் கொண்டு லாவகமாக மேலே மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.