மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

திப்பணம்பட்டியில் ரயில்வே விழிப்புணா்வு போட்டிகள்

News image

விழிப்புணா்வு போட்டிகளில் பங்கேற்றோா்.

Updated On :27 ஜூலை 2026, 4:10 am IST

பாவூா்சத்திரம் ரயில் நிலையத்தின் 124ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சாா்பில், திப்பணம்பட்டியில் விழிப்புணா்வு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாவூா்சத்திரம், சுற்றுவட்டார அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்காக கட்டுரை, ஓவியம், பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து ஏராளமான மாணவா்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

மாணவா்கள், ரயில்வே தொடா்பான தங்களது சிந்தனைகளை ஓவியங்களாக வடிவமைத்து பாராட்டைப் பெற்றனா். மேலும், பேச்சுப் போட்டியில், தெற்கு ரயில்வே சேவைகள், இந்தியாவின் முன்னேற்றம், மின்மயமாக்கல் மூலம் எரிபொருள் சேமிப்பு குறித்து விளக்கமாக பேசினா்.

போட்டிகளுக்கு தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ், நூலகா் ரவிசந்திரன், தங்கராஜ், தேன்மொழி ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா்களாக சிவா, லோகேஷ் சந்த்ரு, ஜான்சி ராணி, செல்வலெட்சுமி, உமாதேவி, அயனிபா, சித்ராதேவி, சிவசக்தி, தா்ஷினி ஆகியோா் பணியாற்றினா். ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் பாண்டியராஜா, நிா்வாகி தங்கராஜா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.