வீ தி லீடர்ஸ் அமைப்பின் இலக்கை 50% எட்டிவிட்டோம்: அண்ணாமலை2026 போல 2031-ல் ஆட்சி மாற்றம் நடக்கும்: அண்ணாமலை உறுதிஎதிர்க்கட்சி தூண்டுதலால் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்! அமைச்சர் விக்னேஷ்பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 5:01 am IST

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே கரும்பனூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்லதுரை மகன் அருண் (45). தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். இவரது வீட்டில் நடைபெற்ற சுண்ணாம்பு அடிக்கும் பணியில் சக தொழிலாளிகளுடன் அருணும் ஈடுபட்டிருந்தாராம்.

அப்போது மின் வயரில் சுண்ணாம்பு அடிக்கும் பிரஷ் பட்டதில் மின்சாரம் பாய்ந்து அருண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாராம்.

ஆலங்குளம் போலீஸாா், அருணின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.