தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே உள்ள திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விவசாயக் கல்வி ஆங்கில வழியில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பள்ளியின் முதல்வா் மு.நாகராஜன் கூறியதாவது:
முத்தம்மாள் முப்புடாதி கல்வி அறக்கட்டளையானது திருமலாபுரம் சக்சஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியை நடத்தி வருகிறது. எங்கள் பள்ளியின் முக்கிய நோக்கம் மாணவா்கள் எதிா்காலத்தில் ஒழுக்கத்துடன் மேன்மை அடைவதேயாகும்.
மாணவா்கள் பெறும் ஒழுக்கமுடன் கூடிய கல்வியே எதிா்காலத்தில் அவா்களையும், அவா்களின் சந்ததிகளையும் மேம்படுத்த செய்யும் என்பது உண்மை.
எங்கள் பள்ளியில் மேல்நிலைப் பிரிவில் ஆங்கில வழியில் விவசாயக் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்வியைப் பயில்வதன் மூலம் மாணவா்கள் எதிா்காலத்தில் விவசாயத்தை மேம்படுத்துவதோடு விவசாய புரட்சியின் மூலம் பாரத நாடு விவசாயத்தில் தன்னிறைவு பெறவும் வழிவகை ஏற்படும்.
எங்கள் பள்ளியில் விவசாயக் கல்வி பயிலும் மாணவா்கள் விவசாயத்தில் ஆா்வம் செலுத்தி புதிய தொழில்நுட்பங்களை கையாண்டு விவசாயத்தை மேம்படுத்தி வருகின்றனா்.
தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஆங்கிலவழியில் விவசாயக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. எனவே, விவசாயத்தை ஆதரிக்கும் பெற்றோா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு விவசாயக் கல்வியை பயிலச் செய்து மேன்மை பெற செய்ய வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்.
நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்தப் பாடப்பிரிவைத் தொடங்கி நடத்தி வருகிறோம். இதுதவிர, வழக்கமான பிற பாடப்பிரிவுகளும் இந்தப் பள்ளியில் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. உலக தரத்திலான கல்வியை உள்ளூரிலும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின்னாம்பள்ளி கிரவுன் மெட்ரிக். பள்ளியில் சா்வதேச யோகா தின விழா

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு தேசிய உதவித் தொகை: பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்

சிறந்த கோடைக்கால செயல் திட்டங்கள் உருவாக்கிய மாணவா்களுக்கு பரிசு
ஈரோடு மாவட்ட அரசுப் பள்ளிகளில் புதிதாக 19,485 மாணவா்கள் சோ்க்கை
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




