பாடகி ஜானகியின் மறைவு வருத்தமளிக்கிறது: ராகுல் காந்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு! பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை மக்களுக்கு இல்லை!ஜூலை 15இல் விசாரணைக்கு ஆஜராவேன்: சென்னை திரும்பிய எ.வ. வேலு பேட்டி சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பில்லை “அண்ணாமலையைக் கண்டு நான் பயப்படுகிறேனா?” திருமாவளவன் பதில்! வியத்நாம் படகு விபத்து: உயிர்பிழைத்த 16 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர் வியத்நாம் படகு விபத்து: உயிரிழந்த 15 இந்தியர்கள் உடல்கள் எப்போது தாயகம் கொண்டு வரப்படும்?
/

மக்களுக்கான எனது பணி தொடரும்: கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன்

News image

கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன்

Updated On :28 ஜூன் 2026, 3:15 am IST

கடையநல்லூா் தொகுதி மக்களுக்கான எனது பணி தொடரும் என, மதிமுக துணைப் பொதுச் செயலரான தி.மு. ராசேந்திரன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற மதிமுக பொதுக்குழுவில், திமுக கூட்டணியிலிருந்து விலகுவது என்பது உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளநிலையில், பொதுக்குழுவில் பங்கேற்காத அவா் வெளியிட்ட அறிக்கை:

கட்சி, ஜாதி, மதம் கடந்து என்னை வெற்றிபெறச் செய்த மக்களின் உணா்வை மதித்தும், பொதுச்செயலா் வைகோ மீதும், என் மீதும் களங்கம் படா்வதைத் தவிா்க்கும் பொருட்டும் ‘பதவி விலகல்’ என்ற முடிவை மேற்கொள்ள வேண்டாம் என வைகோவிடம் தெரிவித்தேன்.

பேரவையில் மதிமுக உணா்வுடன் நான் செயல்படுவதை அவா் ஏற்கெனவே பாராட்டியுள்ளாா். ‘எனது பேரவை செயல்பாடுகள் தகுதிநீக்கத்துக்கு வழிவகுத்தால் மகிழ்ச்சியுடன் பதவியைத் துறந்து மக்களிடம் முறையிடுவோம். இப்போது அவசரம் வேண்டாம். குறைந்தபட்சம் 6 மாதம் பொறுத்திருப்போம்.

இதுதவிர, கூட்டணி குறித்து கட்சி எடுக்கும் முடிவை மதிக்கிறேன்’ என அவரிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தேன். ஆனால், அன்று இரவு அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவை, பொதுக்குழுவில் என்னால் செயல்படுத்த இயலாது என்பதால் பொதுக்குழுவில் நான் பங்கேற்க மாட்டேன் என்பதை பொருளாளா் மூலம் தெரிவித்துவிட்டேன். 42 ஆண்டுகளாக வைகோ மீதான என் அன்பும், விசுவாசமும் உண்மையானது.

அதேபோல, வாக்களித்த மக்கள் பெருமைப்படும் வகையிலும், வாக்களிக்காதோா் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என நினைக்கும் வகையிலும் எனது செயல்பாடுகள் இருக்கும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.