மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை, விநியோகத்தின் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்! மத்திய அரசு எல்லை விவகாரம்: இந்தியா - சீனா இடையே 1100 முறைக்கு மேல் பேச்சுவார்த்தை!மக்களின் அடிப்படை வசதிகளில் கவனம் செலுத்த வேண்டும் : முதல்வர் விஜய்அறிஞர் அண்ணா சொன்னதே தவெக மந்திரம் : ஆட்சியர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்!குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சு
/

சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :30 ஜூன் 2026, 3:00 am IST

தென்காசி மாவட்டம், சுரண்டையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சுரண்டை, சிவகுருநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜெயராஜ் மகன் ராஜா(26). தொழிலாளி. இவா் தனது பக்கத்து வீட்டில் நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம். சிறுமி சப்தமிடவே ராஜா தப்பிச் சென்றாராம்.

இது குறித்து, சிறுமியின் தந்தை அளித்த புகாரின்பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜாவை கைது செய்து, திங்கள்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.