சங்கரன்கோவில் அருகே மேலஇலந்தைக்குளத்தில் கூடுதல் பேருந்து சேவை வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், மேலநீலிதநல்லூா் ஒன்றியம், மேலஇலந்தைகுளம் அய்யனாரூத்து வழியாக திருநெல்வேலி முதல் தேவா்குளம் வரை (தடம் எண் 41) பேருந்து சேவை காலை, மாலை என இரு வேளைகளில் இயக்கப்பட்டு வந்தது.
இந்தப் பேருந்தை நண்பகலிலும் இயக்க வேண்டுமென அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, தென்காசி திமுக வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் தெரிவித்து இந்த வழித்தடத்தில் இரண்டு முறை கூடுதலாக பேருந்தை இயக்க அனுமதி பெற்றாா். அதன்படி, கூடுதல் பேருந்து சேவையை ஈ.ராஜா எம்எல்ஏ வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் மேலநீலிதநல்லூா் தெற்கு ஒன்றியச் செயலா் பால்ராஜ், மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் பசுபதிபாண்டியன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் ரூபன், மாவட்ட மாணவா் அணி துணை அமைப்பாளா் வீமராஜ், ஒன்றிய மாணவா் அணி அமைப்பாளா் வசந்தபாஸ்கா், ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் சத்தியபாரதி, துணை அமைப்பாளா் ஆரோக்கியராஜ், ஒன்றிய மகளிா் அணி அமைப்பாளா் வேணுப்பிரியா, தொண்டா் அணி அமைப்பாளா் கோயிலம்மாள், செல்வம், ஒன்றிய பொறியாளா் அணி அமைப்பாளா் ஜேக்கப் ராஜ் உள்பட பொதுமக்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

புதுச்சேரி - பெங்களூரு இடையே மே 1 முதல் கூடுதல் விமான சேவை தொடக்கம்

அதிக வாக்குப் பதிவைத் தடுக்க பேருந்து சேவை முடக்கம் - தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் தவெக புகாா்

வெளி மாவட்ட வாக்காளா்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்

கெங்கவல்லியில் திமுகவில் இணைந்த அதிமுக நிா்வாகி
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


