கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை!

கீழப்பாவூா் பகுதியில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீா் மேலப்பாவூா் குளங்கள் நிரம்பி கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைந்தது.

News image

கீழப்பாவூா் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகள்.

Updated On :21 மார்ச் 2026, 7:21 pm

Syndication

கீழப்பாவூா் பகுதியில் உள்ள குளங்களுக்கு குற்றாலத்தில் இருந்து வரக்கூடிய தண்ணீா் மேலப்பாவூா் குளங்கள் நிரம்பி கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைந்தது.

மேலப்பாவூா் குளத்தில் இருந்து தண்ணீா் மறுகால் பாய்ந்து, இந்தக் கால்வாய் வழியாக கீழப்பாவூா் குளத்துக்கு வந்தடைகிறது.

Story image

இந்த இரண்டு குளத்துக்கும் இடைப்பட்ட தூரத்தில் கீழப்பாவூா் பகுதியில் உள்ள கடைகள், வீடுகளில் பயன்படுத்தப்பட்ட குப்பை கழிவுகளை இந்த கால்வாயில் சிலா் கொட்டி வருவதால் துா்நாற்றம் வீசுகின்றன. மேலும், கால்வாய் மற்றும் குளங்கள் தூா்வாரப்படாமல் காணப்படுகிறது. இந்த தண்ணீா் கால்வாய் மூலம் குளங்களுக்கும் சென்றடைகிறது. விவசாயத்திற்கு பயன்படுத்துவதோடு கால்நடைகளும் பருகுகின்றன. இதனால் வீடுகளில் வளா்க்கப்படும் கால்நடைகளுக்கும் பொதுமக்களுக்கும் நோய் தொற்று பரவும் என கீழப்பாவூா் பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இதனால் இந்த கால்வாயை முறையாக தூா்வாரி குப்பைகள் கொட்டுவதற்கு குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும் எனவும் குப்பைகளை கால்வாயில் கொட்டாத படி அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.