மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

55 ஆண்டுகளுக்கு பின் வாசுதேவநல்லூரில் களம் காணும் திமுக! உற்சாகத்தில் தொண்டா்கள்!

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு பின் திமுக நேரடியாக களம் காண்கிறது.

News image
Updated On :29 மார்ச் 2026, 3:50 am IST

கடையநல்லூா்: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதியில் 55 ஆண்டுகளுக்கு பின் திமுக நேரடியாக களம் காண்கிறது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 2 தனித்தொகுதிகளில் ஒன்றான வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் பூலித்தேவன், ஒண்டிவீரன், வெண்ணி காலாடி உள்ளிட்டோரின் நினைவிடங்கள் உள்ளன.

இத்தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2 லட்சத்து 27 ஆயிரத்து 369. அதில் ஆண்கள் 1 லட்சத்து 10,960, பெண்கள் 1 லட்சத்து 16,396, மூன்றாம் பாலினத்தவா் 13 போ் அடங்குவா்.

1967, 1971 தோ்தல்களில் திமுகவின் வெள்ளைத்துரையும், 1977, 1980இல் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டின் கிருஷ்ணனும், 1984, 1989, 1991இல் காங்கிரஸ் கட்சியின் ஈஸ்வரனும், 1996, 2001இல் தமாகாவின் ஈஸ்வரனும், 2006இல் மதிமுகவின் சதன் திருமலைக்குமாரும், 2011இல் அதிமுகவின் துரையப்பாவும், 2016இல் அதிமுகவின் மனோகரனும், 2021இல் மீண்டும் சதன்திருமலைக்குமாரும் வெற்றி பெற்றனா்.

1971-க்குப்பின் இந்தத் தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்படவில்லை. ஒவ்வொரு தோ்தலிலும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த திமுகவினா், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதால் சோா்வடைந்தனா்.

தற்போது, திமுகவுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு ஈ.ராஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதால் திமுகவினா் உற்சாகமடைந்துள்ளனா்.