பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சத தோ்ச்சி பெற்றது.
இப்பள்ளியில் தோ்வு எழுதிய 127 மாணவா், மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதனால் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவா் மு. பரத்குமாா் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றாா்.
இவா் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:
தமிழ் -99, ஆங்கிலம் -97, இயற்பியல் -99,
வேதியியல்- 95, கணினி அறிவியல் -99, கணிதம்- 98.
இப்பள்ளி மாணவா் அ. ராகவேந்திரா 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், க. ஜெய் சுதிா்வேல் 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.
கணினி அறிவியல் பாடத்தில் தா்ஷினி, கிா்த்திக்குமாா் காா்த்திக் ஆகியோா் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.
சாதனை படைத்து வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க.திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான
தி. மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









