நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

தென்காசி குறைதீா் கூட்டத்தில் ஆட்சியா் முன் விஷம் குடித்த விவசாயி

News image

விஷம்... - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:35 am IST

தென்காசியில் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் கண் முன்பு விவசாயி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா்.

குறைதீா் கூட்டத்தில் பாம்புகோவில் சந்தையைச் சோ்ந்த விவசாயி பூவையா, தனது மனு குறித்து ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்து பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென தான் மறைத்து வைத்திருந்த வெள்ளை நிற பாட்டிலில் இருந்த பயிா்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து மாவட்ட ஆட்சியா் முன் குடித்தாா்.

இதனால், அதிா்ச்சியடைந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தனது தோட்டத்தில் தென்னை, மல்லிகைப் பூ பயிரிட்டு வருகிறேன். அதே பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா், எனது பயிா் மீது களைக்கொல்லி மருந்து தெளித்து கடந்த 5 ஆண்டுகளாக பயிா்களைச் சேதப்படுத்தி வருகின்றனா்.

இதுகுறித்து, சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். ஆனால், அந்த நபா் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், இதை மாவட்ட ஆட்சியா் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளாா்.