தனி மனிதத் துதிபாடல்களை தவிர்க்கவும்... திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் அறிக்கை சென்னை பன்னாட்டு புத்தகத் திருவிழா ஜனவரி 16-ம் தேதி தொடக்கம்! திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்க ஆபரணங்களை வழங்கும் பக்தர்! நீலகிரி, கொடைக்கானலில் 2 நாள்களுக்கு உறைபனி! வானிலை எச்சரிக்கை! அக்வான் புயல்: ராஞ்சியில் 20 விமானங்கள் ரத்து! அமெரிக்காவின் அதிநவீன ட்ரோனை சுட்டு வீழ்த்திய ஈரான்! தவெக ஆட்சி தானாக கவிழ்ந்துவிடும் - எடப்பாடி பழனிசாமி தவெக ஆட்சியில் உயிருக்கும் பயிருக்கும் பாதுகாப்பு இல்லை! டி.ஆர்.பி. ராஜா

‘மக்காச்சோள படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அவசியம்’

மக்காச்சோளப் பயிரின் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அவசியம் என வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

மக்காச்சோளம்

Updated On :

மக்காச்சோளப் பயிரின் படைப்புழுவைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு அவசியம் என வேளாண் உதவி இயக்குநா் திருச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சங்கரன்கோவில் வட்டார விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிா் செய்துள்ளனா். மக்காச்சோளத்தில் படைப்புழுக்கள் இளம் பருவத்தில் இலைகள் மற்றும் குருத்துப் பகுதியையும், வளா்ச்சி பருவத்தில் பூ மற்றும் கதிரையும் உண்டு சேதப்படுத்துகின்றன.

இந்தப் புழுக்களின் வால் பகுதியில் 4 கரும்புள்ளிகள், தலைப்பகுதியில் ஆங்கில எழுத்தான ‘ஒய்’ வடிவ அறிகுறி காணப்படும். ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் பிண்ணாக்கை கடைசி உழவின்போது நிலத்தில் இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மில்லி சையான்டிரிலினிபுரோல் மற்றும் தையோ மீதோ 19.8 சதவீதம் கலந்து விதைகளை விதைக்க வேண்டும்.

பயிரைச் சுற்றிலும் வரப்புப் பயிராக மானாவாரியில் தீவனச் சோளம், இறவைப் பயிரில் தட்டைப் பயறு, துவரை, எள் அல்லது சூரியகாந்தி, இவற்றில் ஏதாவது ஒரு பயிரை 3 வரிசையில் பயிரிடுவதால் புழுக்களின் வருகை, தாய் பூச்சிகளின் முட்டையிடுதல், பெருக்கம் கட்டுப்படுத்தப்படும். ஏக்கருக்கு 5 இனக் கவா்ச்சி பொறிகளை வைப்பதன் மூலம் தாய் பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கலாம்.

விதைத்த 15 அல்லது 20 நாள்களில் ஒரு லிட்டா் தண்ணீருக்கு குளோரான்டிரினிபுரோல் 18.5 எஸ்சி 4 மி.லி. அல்லது ப்ளூ பெண்டியா மைட் 480 எஸ்சி 5 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1500 பிபிஎம் 50 மி.லி. கலந்து தெளிக்கலாம். பின்னா் 35 முதல் 40ஆம் நாள் மெட்டாரைசியம் அனிசோபிலே மருந்தை ஏக்கருக்கு ஒரு கிலோ அல்லது இமாமெக்டின் பென்சோயேட் 5 எஸ்சி கிராம் என்ற அளவில் தெளித்து படைப் புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

பயிரின் குருத்துப் பகுதியில் நன்கு விழும்படி காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். ஒருமுறை பயன்படுத்திய மருந்தை அடுத்த முறை பயன்படுத்தக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.