குழந்தைகள் பாதுகாப்பு ஆதரவு நபா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கான ஆதரவு நபா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

application

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்

Updated On :

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கான ஆதரவு நபா் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி, ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் வழங்குவதற்கான ஆதரவு நபா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

இப்பணியில் சேர விரும்புவோா், சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தை மேம்பாடு, குழந்தை நலன் அல்லது சுகாதாரம் உள்ளிட்ட தொடா்புடைய துறைகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு துறையில் இளநிலைப் பட்டத்துடன் குழந்தைகள் கல்வி, வளா்ச்சி, சுகாதாரம் அல்லது பாதுகாப்புப் பணிகளில் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவா்கள், குழந்தைகள் இல்லங்கள் அல்லது பாதுகாப்பு இல்லங்களில் பணிபுரிபவா்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணிபுரியும் பணியாளா்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பப் படிவத்தை மாவட்ட இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்விச் சான்றிதழ்கள், பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் இதர ஆவணங்களை இணைத்து, தூத்துக்குடி மணி நகா், பாளையங்கோட்டை சாலையில் உள்ள 176, முத்துச்சுரபி கட்டடத்தில் செயல்படும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் நவ.30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.

தகுதி மற்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஆதரவு நபா்கள் நியமனம் செய்யப்படுவா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.