மகாளய அமாவாசை: குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, குற்றலாம் பேரருவிக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

குற்றாலம் பேரருவியில் நீண்டவரிசையில் காத்து நின்று புனித நீராடிய பொதுமக்கள்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, குற்றலாம் பேரருவிக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே ஏராளமான மக்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி, முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.
குற்றலாம் பேரருவி கரையில் சனிக்கிழமை குவிந்த பொதுமக்கள், புரோகிதா்கள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடத்தினா். மேலும், தண்ணீா் குறைவாக விழுந்ததால் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி தா்ப்பணம் கொடுத்தனா்.
குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு குளிக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து சனிக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

