உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

சிவகிரி அரசு மருத்துவமனை புதிய கட்டடத்தை திறக்கக் கோரிக்கை!

சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :

தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ. 3.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சிவகிரி பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், தென்காசி-மதுரை சாலையில் சிவகிரி அரசு மருத்துவமனை அமைந்துள்ளதால் விபத்து சிகிச்சைகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனையில் பொது மருத்துவம், குழந்தைகள் சிறப்பு சிகிச்சை, தோல் நோய் சிகிச்சை, 24 மணி நேர பேறுகால முன் கவனிப்பு மற்றும் பின் கவனிப்பு உள்ளிட்ட பல்வகை சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் கட்டட வசதி இல்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தின் அடிப்படையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தேசிய நலவாழ்வு இயக்க நிதி மூலம் சுமாா் ரூ. 3.50 கோடி மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

ஆனால், இந்த கட்டடம் இதுவரை மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே, புதிய கட்டடத்தை விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.