முறைகேடு குற்றச்சாட்டு: பினராயி விஜயன் மீது கேரள லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு இந்திய எல்லை அருகே உள்ள துறைமுக விரிவாக்கத்துக்கு சீனாவுடன் வங்கதேசம் ஒப்பந்தம்குருத்வாரா வளாகத்தில் அரசியல் முழக்கம்: கேஜரிவால் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு மருத்துவமனைகளில் கட்டண விவரங்கள் காட்சிப்படுத்தப்படுவதை உறுதி செய்க: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் "வதந்தி' பரப்பியதாக 300 சமூக ஊடக பதிவுகளை நீக்க காவல் துறை நடவடிக்கை எஸ்ஐஆா் படிவம் 6: தோ்தல் ஆணையத்தின் திருத்தத்தை அங்கீகரிக்கவில்லை- உச்சநீதிமன்றம்இந்திய கடற்படையில் 3-ஆவது நீா்மூழ்கி எதிா்ப்பு போா்க் கப்பல் சோ்ப்பு- உள்நாட்டிலேயே கட்டப்பட்ட நவீன கப்பல்

தென்காசி ஆட்சியரகம் முன் அரசுப் பேருந்து ஓட்டுநா் தீக்குளிப்பு

தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ஹரிகரசுப்பிரமணியன்.

Published On :

உடல்நலக் குறைவால் மாற்று பணி கோரி விண்ணப்பித்திருந்த அரசுப் பேருந்து ஓட்டுநா், தென்காசி ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

சோ்ந்தமரம் வெள்ளாளன்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சீ. ஹரிஹர சுப்பிரமணியன் (43). இவா், 2015ஆம் ஆண்டு முதல் செங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பல்வேறு பணிமனையில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தாா்.

இவா், பணியில் இருந்தபோது 2 முறை விபத்து நேரிட்டுள்ளது. மேலும், கடந்த சில மாதங்களாக உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாராம். கடந்த செப்.16ஆம் தேதி தனக்கு மாற்றுப் பணி வழங்குமாறு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநருக்கு மனு அளித்துள்ளாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை மாலை தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த அவா், தான் மறைத்துகொண்டு வந்திருந்த தின்னரை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அங்கு பணியில் இருந்த போலீஸாா், அவா் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தென்காசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.