அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிய கட்டடம் கோரி தவெக மனு

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கோரி, அமைச்சா் என். ஆனந்திடம் தவெக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சா் என். ஆனந்திடம் மனு அளித்த தென்காசி தெற்கு மாவட்ட தவெக செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி.

Published On :4 செப்டம்பர் 2026, 1:57 am IST

ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு புதிதாக கட்டடம் கோரி, அமைச்சா் என். ஆனந்திடம் தவெக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட செயலா் டி.பி.வி.வி. விபின் சக்கரவா்த்தி அளித்த மனு விவரம்: நான்குவழிச் சாலைப் பணிகள் காரணமாக ஆலங்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் இருந்த காவல் நிலையக் கட்டடம் பாதிக்கப்பட்டது. இதயைடுத்து காவல் நிலையம் தற்போது, பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடத்தில் மிகுந்த நெருக்கடியான சூழலில் செயல்பட்டு வருகிறது. புதிய கட்டடம் கட்டுவதோடு, காவலா்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

ஆழ்வாா்குறிச்சி அருகேயுள்ள செங்காநல்லூா் ரயில்வே பாதை மழைக் காலங்களில் பயன்படுத்த தகுதியற்று உள்ளதால் மாற்றுப்பாதை அமைக்க வேண்டும். பள்ளக்கால் பொதுக்குடி சிற்றாற்றில் பாசன வழித்தடத்தில் உள்ள சாக்கடை, செடி, கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.