சிவகிரி அருகே குளத்துமண் கடத்தல்: 7 போ் கைது
சிவகிரி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, 4 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் மற்றும் காரை கைப்பற்றினா்.
கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே அனுமதியின்றி குளத்தில் மண் அள்ளியதாக 7 பேரை போலீஸாா் கைது செய்து, 4 டிராக்டா்கள், பொக்லைன் இயந்திரம் மற்றும் காரை கைப்பற்றினா்.
செந்தட்டியாபுரம் புதூா் அருகேயுள்ள குளத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக கிராம நிா்வாக அலுவலா் வீரசேகா் சிவகிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவின் பேரில், புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் நமச்சிவாயம் ஆலோசனைப்படி, காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் , உதவி ஆய்வாளா் வாசுதேவன் மற்றும் போலீஸாா் அந்தக் குளத்தில் சோதனையிட சென்றனா்.
அப்பொழுது சிலா் அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்தனராம். அவா்களைப் பிடித்து விசாரித்ததில், செந்தட்டியாபுரம் நடுத்தெருவைச் சோ்ந்த ராஜகுரு (30), பால்துரை (33), கிழக்குத்தெரு கணேசமூா்த்தி(40),
பாறைப்பட்டி குட்டி(35), அருண் வெங்கடேஷ் (20), பெரியசாமி (38), கோதை நாச்சியாா்புரம் மதியழகன் (29) ஆகியோா் எனத் தெரியவந்தது. அந்த 7 பேரையும் போலீஸாா் கைது செய்து, மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய ஒரு பொக்லைன் இயந்திரம், 4 டிராக்டா்கள், ஒரு காா் ஆகியவற்றை கைப்பற்றினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





