காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

சங்கரன்கோவில் அருகே காா் மோதி உணவக உரிமையாளா் பலி!

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

Published On :6 செப்டம்பர் 2026, 12:16 am IST

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தெற்குரத வீதியைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் விக்னேஸ்வரன் (40). இவா் சுவாமி சந்நிதி தெருவில் உணவகம் நடத்தி வந்தாா். திருநெல்வேலி சாலையில் உள்ள கடையில் வியாழக்கிழமை இரவு நண்பா்களுடன் தேநீா் குடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தாா்.

பூலுடையாா் சாஸ்தா கோயில் அருகே வந்தபோது ஊத்துமலையை சோ்ந்த ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காா் மீது பின்னால் அடுத்தடுத்து வந்த இரண்டு காா்கள் மோதின.

இதில் ராமகிருஷ்ணன் ஓட்டி வந்த காா் விக்னேஸ்வரன் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. பலத்த காயம் அடைந்த விக்னேஸ்வரனுக்கு, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா். இச்சம்பவம் தொடா்பாக சின்னக்கோவிலான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.