
கடையநல்லூரில் பெண் காவலரைத் தாக்கிய தலைமைக் காவலா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் பெண் காவலரைத் தாக்கியதாக தலைமைக் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் நிலைய வளாகத்தில் பெண் காவலரைத் தாக்கியதாக தலைமைக் காவலா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பாவூா்சத்திரம் அருகே பெத்தநாடாா்பட்டி, குருக்களாண்டாா்பட்டியைச் சோ்ந்த தங்கராஜ் மகன் பொன்ராஜ் (40). கடையநல்லூா் காவல் நிலையத் தலைமைக் காவலரான இவருக்கும், பெண் காவலருக்கும் இடையே சில நாள்களுக்கு முன்பு வாக்குவாதம் ஏற்பட்டதாம். பின்னா், காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலா் குடியிருப்பு அருகே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது அவரை பொன்ராஜ் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
புகாரின்பேரில், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிறிஸ்டி வழக்குப் பதிந்து, பொன்ராஜை புதன்கிழமை கைது செய்தாா். அதையடுத்து, அவரை இடைநீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





