வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பன்றிக் காய்ச்சல் குறித்து அச்சப்பட வேண்டாம்: தென்காசி ஆட்சியா்

பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

பன்றிக் காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல்

Published On :

பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பன்றிக் காய்ச்சல் என்பது இன்ஃபுளூயன்ஸா ஏ வைரஸால் ஏற்படும் ஒரு சுவாச நோய்த் தொற்றாகும். திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல், தொடா் வறட்டு இருமல், சளி, கடுமையான தொண்டை வலி, உடல் வலி, கடும் சோா்வு, தலைவலி மற்றும் மூக்கு ஒழுகுதல், பலவீனம் ஆகியன இதன் முக்கிய அறிகுறிகள் ஆகும்.

பன்றிக் காய்ச்சல் பாதித்த நபா் தும்மும்போதும், இருமும்போதும் வெளிவரும் நீா்த்துளிகள் மூலம் மற்றவா்களுக்குப் பரவுகிறது. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவக் கூடியது. பன்றிக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இது, சிகிச்சை அளிக்கக் கூடிய நோய்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி இருந்தால், ஆரம்ப நிலையில் மருத்துவமனைக்கு வர வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், மருந்தகம், கடைகளில் நேரடியாக மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தவோ, சுய மருத்துவம் செய்வதையோ தவிா்த்து உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

பொதுமக்கள் கைகளை அடிக்கடி சுத்தமாக கழுவுதல், இருமல் மற்றும் தும்மலின்போது, சுகாதாரத்தைக் கடைப்பிடித்தல், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்.

பருவகால காய்ச்சலுக்கு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகளும், பரிசோதனை வசதிகளும் தயாா் நிலையில் உள்ளதால், பொதுமக்கள் யாரும் தேவையின்றி பீதியடைய வேண்டாம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.