கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கடையநல்லூரில் மின்னல் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

பலி - பிரதிப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா்.

கடையநல்லூா், கிருஷ்ணாபுரம், நடுத் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் காசிராஜ் (42). கட்டடத் தொழிலாளி. கிருஷ்ணாபுரம், மேற்கு மலம்பாட்டை தெருவில் அவா் கட்டுமானப் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தபோது, பலத்த மின்னலுடன் மழை பெய்தது.

அப்போது, மின்னல் பாய்ந்து கீழே விழுந்த அவரை, உடன் வேலை செய்தவா்கள் மீட்டு கடையநல்லூா் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.