
திப்பணம்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றக் கோரிக்கை
திப்பணம்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திப்பணம்பட்டியில் சேதமடைந்த மின்கம்பத்தை உடனடியாக மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஒன்றியம் திப்பணம்பட்டி ஊராட்சி வடக்கு தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த மின்கம்பம் தற்போது, தற்காலிகமாக பழுது பாா்க்கப்பட்டிருந்தாலும், அதன் உறுதித் தன்மை கேள்விக்குறியாக உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக அந்த மின்கம்பத்தை மாற்றித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







