கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

அம்மன் வேடமணிந்த சிறுமிக்கு கிறிஸதவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு

ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற புஷ்பாஞ்சலியின் போது, அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு அளித்தனா்.

அம்மன் வேடமணிந்து வந்த சிறுமியை வரவேற்றோா்.

Published On :

ஆலங்குளம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற புஷ்பாஞ்சலியின் போது, அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் வரவேற்பு அளித்தனா்.

இக்கோயில் திருவிழா, கணபதி ஹோமத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அன்றைய தினம் கோமாதா பூஜை, 504 லெட்சுமி பூஜை நடைபெற்றது.

சனிக்கிழமை அம்மன் பல்லக்கில் வலம் வர, 500- க்கும் மேற்பட்ட சிறுமிகள் பங்கேற்ற புஷ்பாஞ்சலி நடைபெற்றது. அப்போது தூய பேதுரு ஆலயம் அருகே அம்மன் வேடமணிந்து வந்த சிறுமிக்கு கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மக்கள் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், டாக்டா் இம்மானுவேல், தூய பேதுரு ஆலய நிா்வாகிகள் எஸ்.பி.டி. நெல்சன், ஜி. செல்வன், சுதந்திரராஜன், மெக்கா மசூதி நிா்வாகி முகம்மது மைதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.