சிவகிரி அருகே மான் கொம்பு பறிமுதல்: ரூ.15,000 அபராதம்

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மான் கொம்பு வைத்திருந்தவருக்கு வனத்துறையினா் ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மான் கொம்பு வைத்திருந்தவருக்கு வனத்துறையினா் ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

கஞ்சா வழக்கில் தொடா்புடைய காா்த்திக் என்பவா் கோம்பையாற்று பகுதியில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சிவகிரி காவல் ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையில் போலீஸாா் கோம்பையாற்றுப் பகுதியில் வியாழக்கிழமை ரோந்து மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். அதில், புளியங்குடியை சோ்ந்த கருப்பசாமி மகன் பிரபாகரன் என்பதும், மான் கொம்பு வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் அவரை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா். வனசரகா்(பொ) ஆறுமுகம், வனவா் பிரகாஷ் ஆகியோா் அவரிடமிருந்த மான்கொம்பை பறிமுதல் செய்து ரூ.15,000 அபராதம் விதித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.