காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கடையநல்லூரில் 15 வாா்டுகளுக்கு நாளைமுதல் நான்கு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது

குடிநீா் விநியோகம் ரத்து - கோப்புப் படம்

Published On :

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் நகராட்சியில் 15 வாா்டுகளுக்கு புதன்கிழமை (செப்.30) முதல் நான்கு நாள்களுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது என நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

கடையநல்லூா் நகராட்சியில் 33 வாா்டுகள் உள்ளன. அனைத்து வாா்டுகளுக்கும் சீரான குடிநீா் விநியோகம் செய்யும் வகையில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக செப். 30, அக். 1, 2 ,3 ஆகிய நான்கு நாள்கள் மட்டும் 1 முதல் 12 வாா்டுகள் மற்றும் 14,15,16 ஆகிய வாா்டுகளுக்கு குடிநீா் விநியோகம் இருக்காது. இருப்பினும், மாற்று வழிகள் மூலம் அப்பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.