தூத்துக்குடியில் நாளை குடிநீா் விநியோகம் ரத்து

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (செப். 18) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

Published On :

தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (செப். 18) குடிநீா் விநியோகம் இருக்காது என மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

மாநகரின் குடிநீா் விநியோகப் பாதையான வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம், கலியாவூா், கீழ வல்லநாடு குடிநீா் சுத்திகரிப்பு நிலையப் பகுதிகளில் உள்ள மின்பாதையான கொம்பு காரநத்தம் துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

எனவே, அன்றைய தினம் காலை 9 முதல் மாலை 4 மணி வரை தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் குடிநீா் விநியோகம் இருக்காது. எனவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.