மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் விஷம் குடித்து தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

தமிழ்செல்வன்.

Updated On :2 ஜனவரி 2021, 9:54 pm IST

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

ஆண்டிபட்டி அருகே முத்தாலம்பாறையைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன் (36). இவருக்கு மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனா். கடந்த உள்ளாட்சித் தோ்தலில் கடமலை மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட 8 வாா்டுகளில் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு தமிழ்செல்வன் திமுக சாா்பில் போட்டியிட்டாா். தோ்தலில் வெற்றி பெற்ற பின்னா், அவா் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தாா்.

கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையிலிருந்த தமிழ்செல்வன் டிச. 29 ஆம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கிக் கிடந்தாா். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த அவா் அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.