கம்பத்திலிருந்து கேரளத்துக்கு கஞ்சா கடத்திய வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கம்பம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் கடந்த 22.9.2020 அன்று கம்பம் வடக்கு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வந்த வழியாக வந்த வேனை நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில் 176 கிலோ கஞ்சா இருந்ததும், அவை கேரளத்துக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இது தொடா்பாக கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் ( 45 ), விவேகானந்தா் தெருவைச் சோ்ந்த குபேந்திரன் (37) ஆகியோா் கைது செய்யப்பட்டனா். மேலும் இதில் தொடா்புடைய கோம்பையைச் சோ்ந்த மலைச்சாமி, கண்ணன், உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த காளிராஜ் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வந்த நிலையில், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்குச் சொந்தமான கடையில் பதுக்கி வைத்திருந்த 80 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திலும் இவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடா்பாக கடந்த சில நாள்களுக்கு முன் காளிராஜை கைது செய்த, கம்பம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் குண்டா் சட்டத்திலும் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக திருப்பூரில் பதுங்கி இருந்த கண்ணன், மலைச்சாமி ஆகியோரை கம்பம் வடக்கு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் ஆய்வு!

அநீதி இழைக்கப்பட்டது... தோல்விக்குப் பிறகு கொந்தளித்த எகிப்து அணியின் பயிற்சியாளர்!

48 மணி நேரத்தில் 1,290 மி.மீ.! லோனாவாலாவை புரட்டிப்போட்ட வரலாறு காணாத கனமழை!

ஃபிஃபா உலகக்கோப்பை: காலிறுதியில் மோதும் 8 அணிகள்!
விடியோக்கள்

பள்ளிக்கூடம் செல்ல முதல்வரிடம் பஸ் வசதி கேட்கும் மாணவி | CM Vijay | TVK | School Bus | Sivagangai
இதற்கு காரணம் செங்கோட்டையன் அல்ல| CM Vijay | TVK | Jagadeswaran interview | Aadhav arjuna

ஒரு அக்காவைப் போலவே அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் பேசினார்! - அமைச்சர் Rajmohan | TVK


