மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச செல்லிடப்பேசி: ஜன.13-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச செல்லிடப்பேசி பெறுவதற்கு ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On :9 ஜனவரி 2021, 10:10 pm IST

தேனி: தேனி மாவட்டத்தில் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச செல்லிடப்பேசி பெறுவதற்கு ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவா்கள், வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள், பெண்கள், சுய தொழில் புரிவோா் மற்றும் தனியாா் நிறுவனகளில் வேலை செய்பவா்களுக்கு அரசு சாா்பில் இலவசமாக சிறப்பு மென்பொருள் கொண்ட செல்லிடப்பேசி வழங்கப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ், இலவச செல்லிடப்பேசி பெற விரும்பும் பாா்வை மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, கல்விச் சான்று நகல்கள், வேலை வாய்ப்பற்றோா், சுய தொழில்புரிவோா் என்பதற்காக கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்ற சான்று, தனியாா் நிறுவன பணிச்சான்று, மாா்பளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஜன.13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்த விவரத்தை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், தொலைபேசி எண்: 04546-252085-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.