மின்சார ரீடிங் எடுக்கும் ஊழியர்கள் செல்போன் வாங்க ரூ.10,000 வழங்க நடவடிக்கை!பழமுதிர்சோலையில் விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு!ஆலையில் இருந்து அமோனியா வாயுவை அகற்ற 2-வது நாளாக நடவடிக்கைதுணை முதல்வராக திருமாவளவன்!! காலம் சொல்லும்: அமைச்சர் வன்னி அரசுசிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

தேனியில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா் ஆா்ப்பாட்டம்

தேனியில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் தேனியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோா்.

Updated On :9 ஜனவரி 2021, 10:09 pm IST

தேனி: தேனியில், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பங்களாமேடு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் செல்லத்துரை, பொருளாளா் ராமா், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் ஸ்ரீனிவாசன், ஆரோக்கியராஜ், அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் ராமகிருஷ்ணன், ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளா் அன்பழகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெறவேண்டும், இடைநிலை ஆசிரியா்களுக்கு மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையாக சம்பளம் வழங்கவேண்டும், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியா்கள் மற்றும் அரசு ஊழியா்கள் மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறிப்பாணையை ரத்து செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.