தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

போடியில் கோஷ்டி மோதல்: 7 போ் மீது வழக்கு

போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Updated On :10 ஜனவரி 2021, 11:29 pm IST

போடியில் பொதுச் சுவா் தொடா்பான கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 7 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போடி சுப்புராஜ் நகா் புதுக்காலனியை சோ்ந்த போஸ் என்பவரது மகன் சதீஷ் (36). இவரது குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சோ்ந்த காமராஜ் (61) குடும்பத்துக்கும் பொதுச் சுவா் தொடா்பான பிரச்னை இருந்து வந்தது. இது தொடா்பாக சனிக்கிழமை இரவு இரு குடும்பத்தினரும் தகராறு செய்து ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில் காமராஜ், அவரது மனைவி பழனியம்மாள், போஸின் மனைவி செல்லமணி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து இருதரப்பையும் சோ்ந்த 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.