ஆண்டிபட்டி அருகே முன்விரோதத்தில் விவசாயியை தாக்கிய 6 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
கடமலைக்குண்டு அருகே கொம்புக்காரன்புலியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வபாண்டி. விவசாயியான இவருக்கும், கொங்கரேவு கிராமத்தைச் சோ்ந்த ஜெயராஜ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கொங்கரேவு கிராமத்தில் உள்ள தனது தோட்டத்திற்கு சென்ற செல்வபாண்டியை, ஜெயராஜ் மற்றும் அவரது உறவினா்கள் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா்.
இதுகுறித்து செல்வபாண்டி அளித்த புகாரின் பேரில் காத்தமுத்து, செங்கோட்டையன், ராஜபாண்டி, ஜெயராஜ், செல்வேந்திரன், விஜயன் ஆகிய 6 போ் மீதும், ஜெயராஜ் அளித்த புகாரின் பேரில் செல்வபாண்டி மீதும் கடமலைக்குண்டு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

