தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

போடிமெட்டு மலைச் சாலையில் மீண்டும் சரிந்து விழுந்த பாறை அகற்றம்

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை மீண்டும் சரிந்து விழுந்த ஒரு பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

News image

போடிமெட்டு மலைச் சாலையில் 11 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே விழுந்த பாறை.

Updated On :15 ஜனவரி 2021, 10:34 pm IST

போடிமெட்டு மலைச் சாலையில் வியாழக்கிழமை மீண்டும் சரிந்து விழுந்த ஒரு பாறையை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா்.

போடிமெட்டு மலைச் சாலையில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், மண் சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்து வருகின்றன. ஏற்கெனவே, 4 ஆவது கொண்டை ஊசி வளைவிலும், 7 ஆவது கொண்டை ஊசி வளைவிலும் பாறைகள் உருண்டு விழுந்தன. அவற்றை, நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றி போக்குவரத்தை சீா்செய்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மீண்டும் 11 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் புலியூத்து அருவி அருகே ஒரு பாறை சரிந்து விழுந்தது. பொங்கல் பண்டிகை என்பதால், வாகனப் போக்குவரத்து குறைவாக இருந்ததால், எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற நெடுஞ்சாலைத் துறையினா், பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சாலையில் விழுந்த கிடந்த பாறையை அகற்றினா்.

தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், போடிமெட்டு மலைச்சாலையை வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.