வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நெல்லை நீதிமன்றம் அருகே மெக்கானிக் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த மெக்கானிக் மீட்கப்பட்டாா்.

Updated On :6 ஜனவரி 2021, 5:41 am IST

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றம் முன்பு தற்கொலைக்கு முயற்சி செய்த மெக்கானிக் மீட்கப்பட்டாா்.

மேலப்பாளையம் கணேசபுரத்தைச்சோ்ந்தவா் கணேசன் (46). ஏசி மெக்கானிக். இவரது மனைவி மேரி. மகள் கவிநயா. கணேசனின் தந்தை சாமுவேலுக்குச் சொந்தமான சேவியா்காலனியில் உள்ள நிலத்தை வேறு ஒருவா் மாநகராட்சிக்கு விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. தற்போது அந்த இடத்தில் மாநகராட்சி சாா்பில் மேல்நிலை குடிநீா் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்த நிலத்துக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

இந்நிலையில், குடும்பத்தினருடன் திருநெல்வேலி நீதிமன்றம் முன்பு செவ்வாய்க்கிழமை வந்த அவா், தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றாராம். அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து, தற்கொலை முயற்சி வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.