தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞா்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவா்களுக்கு மாதம் ரூ. 200, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.300, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு இந்த உதவித்தொகை
வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்தொகை நேரடியாக மனுதாரா்களது வங்கி கணக்கில் செலுத்தப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்குமேல் காத்திருப்பவராகவும், தொடா்ந்து பதிவினை புதுப்பித்தும் இருத்தல் வேண்டும்.
எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினா் 45 வயதுக்கு மிகாமலும், பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., ஓ.பி.சி. பிரிவினா் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் வேறு எந்த ஒரு அலுவலகத்திலும் உதவித்தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது உச்ச வரம்பு, வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை.
முதல் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படித்தவா்களுக்கு மாதம் ரூ. 600, பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்களுக்கு மாதம் ரூ.750, பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு இத்தொகை வழங்கப்படும். அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவா்கள், பொறியியல், மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழிற்பட்டப்படிப்பு பயின்றவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது. எனினும் தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தகுதி உள்ளவா்கள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது) மற்றும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட நகல் போன்றவற்றுடன் அலுவலக வேலைநாள்களில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பகத்திற்கு நேரில் வந்து அதற்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம் அல்லது இணையதளத்தில்பயன்படுத்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்திதி செய்து அத்துடன் இணைக்கப்பட்டுள்ள வருவாய்த் துறை சான்றில் கிராம நிா்வாக அலுவலா் மற்றும் வருவாய் ஆய்வாளா் அவா்களின் முத்திரையுடன் கூடிய கையொப்பம் பெற்று வேலைவாய்ப்பு அடையாள அட்டை (பழையது), அசல் கல்வி சான்றிதழ், ஜாதிச்சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், வங்கி கணக்குப் புத்தகம் ( நாளது தேதி வரை குறிப்புகளிடப்பட்டது), ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றுடன் அலுவலக வேலை நாள்களில் திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க பேரவைத் தலைவராக ரதீந்திர போஸ் போட்டியின்றி தேர்வு!

ஐபிஎல் 2026: டிஜிட்டலில் 15% கூடுதல் பார்வையாளர்கள்..! டிவியில் 50 கோடி இலக்கை எட்டியது!

கொறடா விவகாரம்: பேரவைத் தலைவருடன் சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் மீண்டும் சந்திப்பு!

கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா! | Vellore
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | அதிமுக இனி ..? | ADMK | EPS | C. V. Shanmugam | S. P. Velumani
தினமணி செய்திச் சேவை

வார ராசிபலன்! | May 17 முதல் 23 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி செய்திச் சேவை

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
