ஐபிஎல் போட்டிகளைப் பார்க்கும் பார்வையாளர்கள் டிஜிட்டல் தளத்தில் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொலைக்காட்சியில் மட்டும் 50 கோடி என்ற மைல்கல்லை எட்டி சாதனை படைத்துள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசன் போட்டிகள் மார்ச் 28ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மொத்தமாக 74 போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி மே.31ஆம் தேதி அகமதாபாத் திடலில் நடைபெறவிருக்கிறது.
ஐபிஎல் போட்டிகள் ஜியோ ஹாட்ஸ்டார் செயலியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஜியோ ஸ்டார் வெளியிட்ட அறிக்கையில், “ ஐபிஎல் போட்டிகளுக்கான ஒட்டுமொத்தமான டிஜிட்டல் பார்வையாளர்கள் 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தொலக்காட்சியில் 25 சதவிகிதம் பார்வையாளர்கள் அதிகரித்துள்ளது.
உள்ளூர் மொழிகளுக்கான சேனல்கள் அதிகரிப்பினால் பார்வையாளர்கள் 42 சதவிகிதம் அதிகரித்துள்ளார்கள்.
இந்திய, வெளிநாட்டு விளம்பரதாரர்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளார்கள். கடந்த சீசனை விட 125 புதிய விளம்பரதாரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்” எனக் கூறியுள்ளது.
Summary
IPL viewership grows in digital space; set to hit 500 million on TV: Official broadcaster
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐபிஎல் கோப்பை வென்ற விராட் கோலிக்கு கால்பந்து வீரர் ஹாரி கேன் வாழ்த்து!
என்னுடைய இலக்கை ஐபிஎல் தொடங்கும் முன்பே எழுதி வைத்துவிட்டேன்: வைபவ் சூர்யவன்ஷி

ஹாட்ரிக் ஐபிஎல் கோப்பை வெல்வோம்: ரஜத் படிதார்

இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைத்த ஆர்சிபி!
விடியோக்கள்
முதல்வர் விஜய்யின் தில்லி பயணம் வெற்றியா? | TVK | CM Vijay | PM Modi | Rahul | Vijay Delhi Visit

ஏர் இந்தியா விமான விபத்து! முதலாம் ஆண்டு நினைவு நாள்! | Air India

NEET மறுதேர்வில் செய்ய வேண்டிய மாற்றம் | NEET Re-Exam 2026 | +2 Students | NEET result controversy



