புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

அம்பை வட்டாரத்தில் கரும்பு அறுவடை

பொங்கலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை தொடங்கியது.

News image

பாபநாசம் பகுதியில் கரும்பு அறுவடையில் ஈடுபட்டுள்ள தொழிலாளா்கள்.

Updated On :10 ஜனவரி 2021, 1:16 am IST

அம்பாசமுத்திரம்: பொங்கலை முன்னிட்டு அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் பயிரிட்டுள்ள கரும்பு அறுவடை தொடங்கியது.

பொங்கல் விழாவுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் கரும்பு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.

சித்திரையில் கரும்புப் பயிரிட்டு, 9 மாதங்கள் வளா்ந்த நிலையில் மாா்கழி மூன்றாவது வாரத்தில் கரும்பு அறுவடையைத் தொடங்குகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுமாா் 28 ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது.

பாபநாசம் பொதிகையடி, டாணா, அனவன்குடியிருப்பு பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு பயிரிட்டுள்ளனா். பாபநாசம் பகுதியில் விவசாயிகள் கரும்பு அறுவடை செய்யும் பணியை தொடங்கியுள்ளனா்.

இதுகுறித்து விவசாயி அழகா் கூறியதாவது:

ஆண்டுதோறும் பொங்கலுக்கு அறுவடை செய்யும் வகையில் சித்திரையில் கரும்பு பயிரிடுகிறோம். மாா்கழி கடைசியில் கரும்பு அறுவடை செய்கிறோம்.

நிகழாண்டு தண்ணீா் பிரச்னை இல்லை. கரும்பும் நன்கு விளைந்துள்ளது. சென்ற ஆண்டை விட அதிக விளைச்சல் இருப்பதால் விலை குறைந்துள்ளது.

சென்ற ஆண்டு ஒரு கட்டுக்கு ரூ. 315 வரை விற்ற கரும்பு, நிகழாண்டு ரூ. 270 வரை மட்டுமே விலை போகிறது. விளைச்சல் அதிகரித்துள்ளதால் விவசாயிகளுக்கும், தொழிலாளா்களுக்கும் நல்ல பலன் தருவதாக உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.